நீங்கள் ஒரு போர்டிங் ஹவுஸ் உரிமையாளர் அல்லது வாடகைதாரரா?

இங்கே சில முதன்மை குறிப்புகள் உள்ளன

  • வீட்டில் சரியான இடங்களில் வேலை செய்யும் புகை அலாரங்கள் உள்ளனவா?
  • ஒவ்வொரு படுக்கையறை கதவுகளிலும் செயல்படும் பூட்டுகளுடன் வீடு பாதுகாப்பானதா?
  • வீட்டினுடைய சுவர்கள், ஜன்னல்கள், கதவுகள் மற்றும் கூரைகளில் ஓட்டைகள் அல்லது இடைவெளிகள் இல்லாமல் உள்ளதா?
  • குளியலறை  மற்றும் சமையலறையில் வேலை செய்யும் எக்ஸ்ட்ராக்டர் ஃபேன் உள்ளதா?
  • வீட்டில் கூரை மற்றும் நிலத்தடி இடங்களில் மின்காப்பு உள்ளதா?
  • வீடு கதகதப்பாகவும் உலர்ந்ததாகவும் உள்ளதா?
  • வீட்டில் பிரதானமாக புழங்குமிடத்தில் ஒரு நிலையான ஹீட்டர் உள்ளதா?
  • வீடு பூஞ்சை மற்றும் ஈரமான வாசனை இல்லாமல் உள்ளதா?
  • பகிரப்படும் வசதிகள் சுத்தமாகவும், பூச்சிகள் அற்றதாகவும் உள்ளனவா?
  • ஒவ்வொரு வாடகைக்காரருக்கும் நில உரிமையாளருக்கும் இடையே கையொப்பமிடப்பட்ட எழுத்துப்பூர்வ குத்தகை ஒப்பந்தம் உள்ளதா (தேவையான அனைத்து கூற்றுகள் உட்பட)?
  • அவசரகால வெளியேற்ற நடைமுறைகள் மற்றும் வீட்டு விதிகளின் நகல் அனைவரிடமும் உள்ளனவா? அவை வீட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனவா?
  • குத்தகைதாரரால் பிணைத்தொகை செலுத்தப்பட்டிருந்தால் அதற்கான ரசீது வழங்கப்பட்டதா?
  • வாடகைதாரரால் 1 வாரத்திற்கு மேல் பிணைத்தொகை செலுத்தப்பட்டிருந்தால் - அது குத்தகை சேவைகளுக்கு தெரியப்படுத்தப் பட்டுள்ளதா?
Rating form

Did you find this information helpful?

Last updated: 06 December 2022